ராமநாதபுரம்,
திருப்புல்லாணிஅருகே உள்ளது வெள்ளரிஓடை. இந்த ஊரைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் மகன் வெள்ளைச்சாமி (வயது65). இவர் ராமநாதபுரம் போக்குவரத்து நகரில் உள்ள மகள் வீட்டில் மனைவி சொர்ணகோமதியுடன் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் வெள்ளைச்சாமி புத்தேந்தலில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு வெள்ளரிஓடைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது திருப்புல்லாணி அருகே உத்தரகோசமங்கை விலக்கு பகுதியில் ராமநாத புரத்தில் இருந்து கீழக்கரை சென்ற அரசு பஸ் மோதி வெள்ளைச்சாமி படுகாயமடைந்தார். ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த டாக்டர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் மனைவி சொர்ணகோமதி அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் நெல்லை சரஸ்வதி நகரை சேர்ந்த இசக்கி என்பவரை தேடிவருகின்றனர்.