தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
தொழிலாளியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் சத்யேந்திர மலாகர் (வயது 26). இவர் திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அங்குள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று தனது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அன்னை இந்திரா நகரை சேர்ந்த தினேஷ் (29) என்பவர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்பகையை மனதில் வைத்துக்கொண்டு அவரை தகாத வார்த்தையால் பேசி அடித்து உதைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு தப்பிச்சென்றார்.
இதுகுறித்து சத்யேந்திர மப்பேடு போலீசில் புகார் செய்தார். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தினேசை கைது செய்தனர்.