திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுைகயிட்டு பொதுமக்கள் மனு

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுைகயிட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.

Update: 2022-03-14 11:53 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் டவுன் 24-வது வார்டு ஜார்ஜ்பேட்டை மற்றும் அபாய் தெருவில் வசிக்கும் 80 குடும்பத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தி.மு.க. நகராட்சி கவுன்சிலர் சுதாகர் தலைமையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம் மனு கொடுத்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் டவுன் ஜார்ஜ்பேட்டை மற்றும் அபாய்தெருவில் 50 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் 80 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். அனைவரும் கூலி வேலை மற்றும் பீடி சுற்றியே பிழைப்பை நடத்தி வருகிறோம்.
நாங்கள் ஏழ்மை நிலையில் உள்ளோம். எனவே நாங்கள் குடியிருக்கும் பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர். 
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், ஆதார் அட்டை, வீட்டு வரி, குடிநீர், மின்சாரம், ரசிதுகளை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை உரிய முறையில் விசாரணை நடத்தி உரியவர்களுக்கு உடனடியாக இலவச வீட்டு மனைபட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும், எனக் கூறினார்.

மேலும் செய்திகள்