பொறியியல் கல்லூரி மாணவர் மீது தாக்குதல்; 2 வாலிபர்கள் கைது
கோவில்பட்டி அருகே பொறியியல் கல்லூரி மாணவரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின் புதூர் வி.பி. சிந்தன் நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மந்திரமூர்த்தி (வயது 21). இவர் நெல்லை பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது உறவினர்களான இதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் மாயாண்டி (29) மற்றும் மாரியப்பன் மகன் முத்துராஜ் (28) ஆகியோருக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மந்திரமூர்த்தி தனது வீட்டருகே நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த மாயாண்டியும், முத்துராஜூவும் மந்திரமூர்த்திடம் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மந்திரமூர்த்தியின் தாய் நாகஜோதி அளித்த புகாரின் பேரில் நாலாட்டின்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின் வழக்குப்பதிவு செய்து மாயாண்டி, முத்துராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.