பெரம்பலூரில் புதிதாக ஒருவருக்கு கொரோனா
பெரம்பலூரில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக புதிதாக கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று வேப்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். ஆனால் நேற்று யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் நேற்று ஒருவர் குணமாகியுள்ளார். தற்போது மாவட்டத்தில் 4 பேர் மட்டுமே கொரோனாவுக்கு வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 35 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.