பள்ளி ஆசிரியையை பிரிய மனமின்றி மாணவர்களின் பாசப்போராட்டம்

காரியாபட்டி அருகே பள்ளி ஆசிரியையை பிரிய மனமின்றி மாணவர்களின் பாசப்போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-03-13 21:08 GMT
காரியாபட்டி, 
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள உலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2009-ம் ஆண்டு முதல் தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் பூமாரி. இவர் பணியில் சேர்ந்த நாள் முதல் தற்போதுவரை பள்ளியில் மாணவ, மாணவிகளிடையே அன்பாக பழகும் தன்மை உடையவராக இருந்தார். இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முதுகலை ஆசிரியையாக பதவி உயர்வு பெற்று இடம் மாறுதல் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் வெம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்  மாற்றப்பட்டார். கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்த பூமாரி திடீரென பதவி உயர்வில் இடமாறுதலாகி பள்ளியை விட்டுச்செல்லும் செய்தியறிந்த உலக்குடி அரசுப்பள்ளி மாணவர்கள் ஆசிரியரை கண்டதும் அவரை பிரிய மனமின்றி அனைவரும் திடீரென கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவர்களது பாசம் அனைவரையும் நெகிழ செய்தது. இதனை பார்த்த போது அங்கிருந்தவர்களும் கதறி அழுதனர். பின்னர் அனைவரும் கனத்த இதயத்துடன் கண்ணீர் மல்க ஆசிரியரை வழி அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்