22 நாட்களுக்கு பிறகு கணவர் கைது
பெண் கொலையில் 22 நாட்களுக்கு பிறகு கணவர் கைது செய்யப்பட்டார்
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் அருகே குறவன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வேங்கையன் (வயது 32). இவருடைய மனைவி கண்ணம்மாள் (29). கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்தவேங்கையன், கண்ணம்மாளை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த வேங்கையனை தேடி வந்தனர்.
இந்தநிலையில் அலங்காநல்லூர் அருகே அய்யூர் பிரிவு சாலை பகுதியில் பதுங்கி இருந்த வேங்கையனை அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.