சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற்சங்க கூட்டம்
பாளையங்கோட்டையில் சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற்சங்க கூட்டம் நடந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) நிர்வாகக்குழு கூட்டம் பாளையங்கோட்டை தியாகராஜநகர் மின்வாரிய தொழிற்சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநிலக்குழு வலதி பெருமாள் தலைமை தாங்கினார். ஆட்டோ சங்கத்தின் பொதுச்செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜோதி, சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் மாநிலக்குழு முடிவுகள் குறித்து பேசினார்.
வருகிற 28, 29-ந் தேதிகளில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் சம்பந்தமாக தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் சிவாஜி பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர்கள் நடராஜன், உதயசூரியன், துணை செயலாளர் செய்யதலி, மேலப்பாளையம் சங்க நகர செயலாளர் பாஷா, மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணகுமாரி, ஜிந்தாபாய் மற்றும் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பை, மேலப்பாளையம், மானூர், சேரன்மாதேவி, மன்னார்புரம், களக்காடு, பரப்பாடி, கீழகருவேலங்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆட்டோ தொழிலாளர் திரளாக பங்கேற்றனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தேவி நன்றி கூறினார்.