வாலிபருக்கு அரிவாள் வெட்டு
நெல்லையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
நெல்லை:
பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 27). இவர் நேற்று காலை மனகாவலன்பிள்ளை நகர் பகுதியில் தனது நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அவர்கள், ராம்குமாரை அரிவாளால் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த ராம்குமார் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.