போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-13 19:11 GMT
சங்கராபுரம், 
சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக  பணிபுரிந்து வருபவர் அருள்மணி. இவர் அரசம்பட்டில் இருந்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பூட்டை காலனி பகுதியில் இரு தரப்பை சேர்ந்தவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டிருந்தனர். இதைபார்த்த அருள்மணி, அவர்களை தடுத்து சமாதானப்படுத்த முயன்றார். அப்போது அதே ஊரைச்சேர்ந்த  தென்றல்அரசன், ராஜாராமன், சங்கீத், ராஜா ஆகியோர் அருள்மணியை திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து  தென்றல்அரசனை(வயது 26) கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்