பட்டாசு வெடித்த போது விபத்து; முதியவர் சாவு
உளுந்தூர்பேட்டை அருகே பட்டாசு வெடித்த விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புகைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் (வயது 59). சம்பவத்தன்று இவர் அதே ஊரில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அங்கு பட்டாசு வெடித்தபோது எதிர்பாராதவிதமாக அய்யனார் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அய்யனார் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.