முருகன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம்

ஆத்தூர் அருகே வடசென்னிமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

Update: 2022-03-13 18:12 GMT
கள்ளக்குறிச்சி, 

ஆத்தூர் அருகே வடசென்னிமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வருகிறது. விழாவின் 4-ம் நாளான நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஏராளமானபக்தர்கள் கோட்டைமேடு பகுதியில் ஒன்று திரண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். 

பின்னர் அவர்கள் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தி தேர் இழுத்தும் ஊர்வலமாக அண்ணாநகர் விநாயகர் கோவில் வரை சென்றனர். பின்னர் அங்கிருந்து வாகனங்களில் வடசென்னிமலை முருகன் கோவிலுக்கு சென்று சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்