வெற்றியும், தோல்வியும் கட்சியின் போக்கை மாற்ற முடியாது- கே.எஸ்.அழகிரி

வெற்றியும், தோல்வியும் கட்சியின் போக்கை மாற்ற முடியாது என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

Update: 2022-03-13 18:45 GMT
கொள்ளிடம்:-

வெற்றியும், தோல்வியும் கட்சியின் போக்கை மாற்ற முடியாது என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். 

அழகிரி பேட்டி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் நேற்று நடந்த தனியார் ஆஸ்பத்திரி திறப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
ஜனநாயகத்தில் வெற்றியும், தோல்வியும் ஒரு நாட்டினுடைய அல்லது ஒரு அரசியல் கட்சியின் போக்கை மாற்றி விட முடியாது. 100 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சி, பல முறை பின்னடைவை சந்தித்துள்ளது. 
ஏராளமான முறை வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவின் மூலமாக நாங்கள் எப்படி செல்ல வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்கிறோம். இதில் சிரமம் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. 

இணைந்து செயலாற்ற...

இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து நின்று செயலாற்ற வேண்டும் என்று திருமாவளவன் கூறியிருக்கிறார். அது வரவேற்க வேண்டிய கருத்து. 
ஏற்கனவே மதச்சார்பற்ற கூட்டணியில் இடதுசாரிகளையும், முற்போக்காளர்களையும், ஜனநாயக சக்திகளையும் ஒன்று திரட்டி பணியாற்றி வருகிறோம். எனவே அந்த கருத்து ஏற்புடைய ஒன்று.  
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்