கோவையில் 10 பேருக்கு கொரோனா
கோவையில் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
கோவை
கோவையில் நேற்று 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 851 ஆக உயர்ந்து உள்ளது.
கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 27 பேர் குணமடைந்து வீடுதிரும்பினர். இதையடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 27 ஆயிரத்து 92 ஆக அதிகரித்து உள்ளது.
தற்போது மாவட்டத்தில் 142 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையில் நேற்று 2-வது நாளாக கொரோனா தொற்றுக்கு உயிரழப்பு இல்லை.