தேன்கனிக்கோட்டை அருகே வரதராஜ சாமி கோவில் திருவிழா பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்

தேன்கனிக்கோட்டை அருகே வரதராஜ சாமி கோவில் திருவிழாவில் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

Update: 2022-03-13 16:47 GMT
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அன்னியாளம் கிராமத்தில் வரதராஜ சாமி கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. மலை மீது உள்ள சாமிக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமியை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் கோவிலை சுற்றி இழுத்து வரப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது. தேர்த்திருவிழாவில் அன்னியாளம், கக்கதாசம், சீர்திம்மனட்டி, வரதரெட்டிபாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்