தொப்பூர் அருகே போலீசாரால் தேடப்பட்ட லாரி கிளீனர் கைது
தொப்பூர் அருகே போலீசாரால் தேடப்பட்ட லாரி கிளீனர் கைது செய்யப்பட்டார்.
நல்லம்பள்ளி:
தொப்பூர் அருகே ஏலகிரி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 36). லாரி டிரைவர். இவருடைய மனைவி சந்தியா (32). லாரி கிளீனரான வெற்றிவேல் (29) சக்திவேலின் வீட்டிற்கு வரும்போது தவறான நோக்கத்துடன் தன்னிடம் பழக முயன்றதாக சந்தியா தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான சக்திவேல், சந்தியாவை பல நாட்களாக அடித்து உதைத்து அதை செல்போனில் படம் பிடித்து உள்ளார். இதுதொடர்பாக தொப்பூர் போலீஸ் நிலையத்தில் சந்தியா புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சக்திவேலை கைது செய்தனர். தலைமறைவான வெற்றிவேலை தேடி வந்தனர். இந்த நிலையில் லாரி கிளீனர் வெற்றிவேலை போலீசார் கைது செய்தனர்.