தவக்காலத்தையொட்டி கிறிஸ்தவர்கள் சிலுவை வழிபாடு

தவக்காலத்தையொட்டி கிறிஸ்தவர்கள் சிலுவை வழிபாடு நடைபெற்றது.

Update: 2022-03-13 16:33 GMT
கோவை

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளியாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். மேலும் அவர் சிலுவையில் அறையப்பட்டு 3-வது நாளில் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். 

அதற்கு முந்தைய 40 நாட்களும் இயேசுவின் சிலுவைப் பாடுகளை நினைவு கூறும் வகையில் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்த தவக்காலத்தின் போது கிறிஸ்தவர்கள் வீடுகளில் அசைவ உணவு உண்ண மாட்டார்கள். மேலும் விரதம், சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளுவார்கள். 

தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் சிலர் தங்கள் உணவுக்காக செலவு செய்யும் தொகையை சேமித்து அதனை ஈஸ்டர் பண்டிகையின் போது ஏழை எளிய மக்களுக்கு வழங்கி மகிழ்வார்கள்.

தவக்காலத்தையொட்டி ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயங்களிலும் கிறிஸ்தவர்கள் வழிபட சிலுவை வைக்கப்பட்டுள்ளது. அதன் முன்பு முழங்காலிட்டு கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

கோவை பெரியகடை வீதியில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள சிலுவை முன்பு கிறித்தவர்கள் பலர் வழிபாடு செய்து வருகின்றனர். 

தவக் காலத்தின் தினமும் சிறப்பு திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் கத்தோலிக்க மறைமாவட்டம் சார்பில் நடைபெற்று வருகிறது. தவக்காலத்தையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சிலுவைப்பாதை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்