மின்சாரம் நிறுத்தம்
லட்சுமணம்பட்டி, வேடசந்தூர் பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள லட்சுமணம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே லட்சுமணம்பட்டி, சுக்காம்பட்டி, காலனம்பட்டி, பஞ்சம்பட்டி, காக்காதோப்பு, சேடபட்டி, பெருமாள்கவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று திண்டுக்கல் வடக்கு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே வேடசந்தூர், லகுவணம்பட்டி, நாகம்பட்டி, தம்மணம்பட்டி, முதலியார்பட்டி, வெள்ளனம்பட்டி, நாககோனனூர், காளனம்பட்டி, ஸ்ரீராமபுரம், அரியாபித்தம்பட்டி, தட்டாரப்பட்டி, அய்யம்பாளையம், ஆண்டியகவுண்டனூர், மல்வார்பட்டி, சிக்கிராம்பட்டி, சோனாபுதூர், மாத்தினிபட்டி, பூத்தாம்பட்டி, அம்மாபட்டி, குஞ்சுவீரன்பட்டி, நொச்சிபட்டி, விராலிபட்டி, புதுப்பட்டி, தெத்துப்பட்டி, சேனான்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி, பெரியபட்டி, பூவாய்பாளையம், முருநெல்லிக்கோட்டை, நவாலூத்து, சுள்ளெரும்பு, குருநாதநாயக்கனூர், நடுப்பட்டி, கிருஷ்ணாபுரம், ராமகவுண்டன்பட்டி, நவாமரத்துப்பட்டி, திப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை வேடசந்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.