விக்கிரவாண்டியில் பள்ளி மேலாண்மை குழு சந்திப்பு இயக்கம்
விக்கிரவாண்டியில் பள்ளி மேலாண்மை குழு சந்திப்பு இயக்கம்
விக்கிரவாண்டி
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவுபடி, முதன்மைக்கல்வி அலுவலர் ஆலோசனையின் பேரில், விக்கிரவாண்டி பஸ் நிலையம் அருகில் பள்ளி மேலாண்மை குழு சந்திப்பு இயக்கம் மற்றும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு விக்கிரவாண்டி பேரூராட்சி தலைவர் அப்துல்கலாம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாலாஜி, பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் சர்க்கார் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் கீதா வரவேற்றார். இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழழகன், பெல்லாரோஜோசப், கமலக்கண்ணன் ஆகியோர் கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, பள்ளி மேலாண்மை குழு பாடத் தொகுப்பு அடங்கிய புத்தகத்தையும் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட்டனா். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் பிரியா பூபாலன், தி.மு.க. நகர செயலாளர் நைனாமுகம்மது, திலகர், செல்வா ரமேஷ், லட்சுமி நாராயணன், ஆசிரியர்கள் சரவணன், ஜெகநாதன், கவிப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.