மணல் கடத்திய 2 மினிடிப்பர் லாரிகள் பறிமுதல்

மணல் கடத்திய 2 மினிடிப்பர் லாரிகள் பறிமுதல்

Update: 2022-03-13 16:05 GMT
குடியாத்தம்

குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில் குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், பெருமாள் உள்ளிட்டோர் இன்று காலை குடியாத்தம் அருகே கொத்தகுப்பம் சுடுகாட்டு பகுதியில் ரோந்து சென்றனர். 

அப்போது அந்த வழியாக வந்த 2 மினிடிப்பர் லாரிகளை நிறுத்தினர். போலீசாரை கண்டதும் லாரியில் இருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

போலீசார் 2 மினிடிப்பர் லாரிகளிலும் கடத்தி வந்த தலா 2 யூனிட் மணல் இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து 2 மினி டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் மினிடிப்பர் லாரிகளின் உரிமையாளர்கள் காக்காதோப்பு சுந்தர், அணங்காநல்லூர் வெங்கடேசன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்