திருவெண்ணய்நல்லூர் அருகே மாட்டுவண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதல் தொழிலாளி சாவு

திருவெண்ணய்நல்லூர் அருகே மாட்டுவண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதல் தொழிலாளி சாவு

Update: 2022-03-13 15:49 GMT

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மணக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வையாபுரி மகன் முருகதாஸ்(வயது 45). தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு மணக்குப்பம் கிராமத்தில் இருந்து பெரியசெவலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். துலுக்கபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது முன்னால் கரும்பு ஏற்றி சென்று கொண்டிருந்த மாட்டு வண்டியின் மீது முருகதாஸ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்