பிரம்மதேசம் அருகே மரத்தில் லாரி மோதி விபத்து
பிரம்மதேசம் அருகே மரத்தில் லாரி மோதி விபத்து
பிரம்மதேசம்
திண்டிவனம் மார்க்கத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 5 மணியளவில் மரக்காணம் அருகே உள்ள ராஜாம்பாளையம் கிராமத்தில் வந்தபோது எதிர்பாரதவிதமாக சாலையோர மரத்தில் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
லாரி மோதிய வேகத்தில் மரத்தின் கிளைகள் ஒடிந்து விழுந்ததால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த போலீசார் ஒடிந்த மரக்கிளைகள் மற்றும் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.