அரிய வகை ‘ஆலீவ் ரெட்லி’ ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
அரிய வகை ‘ஆலீவ் ரெட்லி’ ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
அரியாங்குப்பம், மார்ச்.13-
புதுச்சேரி அரசு வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வனத்துறை சார்பாக தவளக்குப்பம் அடுத்த பூ.புதுக்குப்பம் கடற்கரையில் அரியவகை ஆலிவ் ரெட்லி ஆமைகளின் முட்டைகள் பாதுப்பாக வைக்கப்பட்டு இருந்தன. அந்த முட்டைகள் பொரித்த நிலையில் முதல் கட்டமாக 555 ஆமை குஞ்சுகள் புதுக்குப்பம் கடலில் இன்று காலை விடப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம் கலந்துகொண்டு ஆமை குஞ்சுகளை கடலில் விட்டு தொடங்கி வைத்தார். இதில் வனத்துறை துணை வனக்காப்பாளர் வஞ்சுளவல்லி, துணை இயக்குனர் குமரவேல், வனஅதிகாரி பிரபாகரன், வனத்துறை ஊழியர்கள் கண்ணதாசன், வெங்கடேசன், கிருஷ்ணசாமி, தணிகைவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதேபோல் கிருமாம்பாக்கம் அடுத்த நரம்பை கடற்கரையில் 600 ஆமை குஞ்சுகளும் விடப்பட்டன.