காஞ்சீபுரம் மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் 600 வழக்குகளுக்கு தீர்வு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் 600 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதாக மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-13 12:28 GMT
லோக் அதாலத்

காஞ்சீபுரம் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் சட்டப்பணிகள் குழு சார்பில் மாதந்தோறும் லோக் அதாலத் முகாம் நடைபெறுவது வழக்கம்.

இதில் மோட்டார் வாகன விபத்து, காசோலை மோசடி, நிலப்பிரச்சினைகள் உள்ளிட்ட வழக்குகளுக்கு இருதரப்பினர் இடையே நீதிபதி முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வழக்கு முடிவு பெறும். இந்த லோக் அதாலத் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த வகையில் நேற்று காஞ்சீபுரம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கோர்ட்டு வளாகத்தில் காஞ்சீபுரம் மாவட்ட நீதிபதி சந்திரன் தலைமையில், சட்ட பணிகள் குழு நீதிபதி ஞானசம்பந்தன் முன்னிலையில் லோக் அதாலத் தொடக்க விழா நடைபெற்றது. இதில் அரசு வக்கீல் கார்த்திகேயன் உள்ளிட்ட வக்கீல்கள் கலந்துக்கொண்டனர்.

600 வழக்கு

அதன் பிறகு மாவட்ட நீதிபதி சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காஞ்சீபுரத்தில் 8 கோர்ட்டுகளிலும், ஸ்ரீபெரும்புதூரில் 2 கோர்ட்டுகளிலும், உத்தரமேரூர் கோர்ட்டிலும் லோக் அதாலத் முகாம் நடைபெற்றது.

இதன் மூலம் 600 வழக்குகளுக்கு தீர்வு காணப் பட்டது. இதில் ரூ.15 கோடி மதிப்பிலான நஷ்ட ஈட்டுத்தொகை வழங்க இயலும் எனவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்