தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை சூளைமேடு எத்திராஜ் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 48). இவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைப்பார்த்து வந்தார். அசோக்குமார் கடந்த ஒரு ஆண்டாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அதற்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்ததால் மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்தநிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அசோக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.