கோவில்பட்டியில் ரூ.15 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 2பேர் கைது
கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கியிருந்த ரூ15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, வடமாநில வாலிபர்களை 2 பேரை கைது செய்தனர்
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கியிருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, வடமாநில வாலிபர்களை 2 பேரை கைது செய்தனர்.
வீட்டில் பதுக்கல்
கோவில்பட்டி வ.உ.சி நகர் 3-வது தெருவில் ஒரு வீட்டில் தடைசெய்யப் பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பெட்ரிக்ராஜன் தலைமையில் போலீசார் வ.உ.சி.நகருக்கு சென்று குறிப்பிட்ட வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 80 மூட்டை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
புகையிலை பொருட்கள் பறிமுதல்
அந்த புகையிலை பொருட்களை அடங்கிய மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். அந்த வீட்டிலிருந்து 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மேகாசிங் (வயது 27), உத்தமசிங் (28) என தெரிய வந்தது. அந்த 2 பேரையும் தனிப்பிரிவு போலீசார் கோவில்பட்டி மேற்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.