ஆற்காடு அருகே கிணற்றில் பிணமாக கிடந்த குழந்தை, பெண் அடையாளம் தெரிந்தது
ஆற்காடு அருகே கிணற்றில் பிணமாக கிடந்த குழந்தை, பெண் அடையாளம் தெரிந்தது
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பது வெட்டி ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் மற்றும் 3 வயது பெண் குழந்தை பிணமாகா கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆற்காடு டவுன் போலீசார் சென்று பிணமாக கிடந்த பெண் மற்றும் குழந்தையின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்த பெண் மற்றும் குழந்தை யார் என்பது தெரியாமல் இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்தது. ஆற்காடு தந்தைபெரியார் தெருவைச் சேர்ந்த கல்பனா 31, அவரது குழந்தை சந்தனா ஸ்ரீ (3) என்பது தெரியவந்தது. மேலும் கல்பனாவிற்கும் வாலாஜாவை அடுத்த வீசி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த தனியார் கம்பெனியில் வேலை செய்யும் சுரேஷ் (35) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது.
இந்தநிலையில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட கல்பனா கடந்த சில மாதங்களாக ஆற்காட்டில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி வசித்து வந்துள்ளார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற கல்பனா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.