வேலூர் அருகே ஆட்டோ மோதி முதியவர் பலி

வேலூர் அருகே ஆட்டோ மோதி முதியவர் பலியானார்.

Update: 2022-03-13 11:04 GMT
வேலூர்

வேலூர் தாலுகா கம்மவான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 62), திருமண இடைத்தரகர். இவர்  முன்தினம் வேலை விஷயமாக பெருமுகைக்கு சென்றார். பின்னர் அவர் வீட்டிற்கு செல்வதற்காக பஸ் ஏற சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை நடந்து சென்று கடக்க முயன்றார். அப்போது வேலூரில் இருந்து ராணிப்பேட்டை நோக்கி சென்ற ஆட்டோ திடீரென நாராயணசாமி மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்