போராட்டத்தில் ஈடுபட்ட 18 விவசாயிகள் கைது

கடையநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-13 00:07 GMT
கடையநல்லூர்:
திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை-புளியரை வரையில் 4 வழிச்சாலையாக மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக தென்காசி மாவட்டம் சிவகிரி, கடையநல்லூர், செங்கோட்டை தாலுகாக்களில் 23 கிராமங்களில் 1,863 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடையநல்லூரில் நான்கு வழிச்சாலை திட்டப்பணிக்கு நேற்று நில அளவீடு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 18 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து நில அளவீடு செய்யும் பணி நடந்தது.

மேலும் செய்திகள்