ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு

பாளையங்கோட்டையில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-03-12 22:49 GMT
நெல்லை:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள வடக்குவேப்பங்குளம் ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் உடையார். இவருடைய மகன் கண்ணன் (வயது 28). இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு முகாமில் தங்கியிருந்து வந்தார். சம்பவத்தன்று முகாமை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை.

இந்த நிலையில் கண்ணன் பாளையங்கோட்டையில் ரெயிலில் அடிபட்டு படுகாயத்துடன் கிடந்தார். அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மேலும் செய்திகள்