கொண்டலாம்பட்டி அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட 3 திருநங்கைகள் கைது

கொண்டலாம்பட்டி அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட 3 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-12 22:24 GMT
கொண்டலாம்பட்டி:
சங்ககிரி அருகே உள்ள பச்சன்காட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் சுப்ரீம் (வயது 23). இவர் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சேலம் சென்று விட்டு இரவு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டாலம்பட்டி அருகே ராக்கிபட்டி பிரிவு ரோடு பகுதியில் மோட்டார் சைக்கிளை ஒரு கார் வழிமறித்து நின்றது. காரில் இருந்து இறங்கி வந்தவர்கள் கத்தியை காட்டி மிரட்டி சுப்ரீம் அணிந்து இருந்த 3 பவுன் நகையை பறித்து சென்று விட்டனர். காரில் 3 திருநங்கைகள் உள்பட 5 பேர் வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
விசாரணையில் நகை பறித்ததாக கடலூர் மாவட்டம் மாங்குப்பத்தை சேர்ந்த ஜில்லு என்கின்ற பிரியா (25), மஞ்சகுப்பத்தை சேர்ந்த ஸ்ரீஜா (22), மீரா (25) ஆகிய 3 திருநங்கைகளையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த நகை மீட்கப்பட்டது. மேலும் இதில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்