ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து இளம்பெண் உள்பட 2 பேர் சாவு
ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து இளம்பெண் உள்பட 2 பேர் சாவு
விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டே அருகே கோடகினால் கிராமத்தின் வழியாக நேற்று காலை ஒரு ரெயில் சென்று கொண்டு இருந்தது. அப்போது ஒரு பெட்டியின் படிக்கட்டின் அருகே நின்று கொண்டு இருந்த ஒரு இளம்பெண் மற்றும் வாலிபர் ரெயிலில் இருந்து கீழே விழுந்தனர்.
இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதுபற்றி அறிந்த விஜயநகர் ரெயில்வே போலீசார் அங்கு சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் பெயர், விவரம் தெரியவில்லை. 2 பேரும் காதல் ஜோடியா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.