கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.34½ லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.34½ லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம் போனது.

Update: 2022-03-12 21:48 GMT
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாட்டு சர்க்கரை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,662 மூட்டைகளை விற்பனைக்காக  கொண்டுவந்திருந்தனர். இதில் 60 கிலோ மூட்டை கொண்ட நாட்டு சர்க்கரை முதல் தரம் குறைந்தபட்ச விலையாக 2 ஆயிரத்து 100 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2 ஆயிரத்து 120 ரூபாய்க்கும், 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக 2 ஆயிரத்து 40 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2 ஆயிரத்து 90 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. நாட்டு சர்க்கரை மொத்தம் ரூ.34 லட்சத்து 55 ஆயிரத்து 520-க்கு ஏலம் போனது. 
இந்த நாட்டு சர்க்கரையை பழனி முருகன் கோவில் நிர்வாகத்தினர் கொள்முதல் செய்தனர். 

மேலும் செய்திகள்