திருவிழாவையொட்டி ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு
ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பெரிய மாரியம்மன் கோவில்
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் பிரசித்திபெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. மேலும் இந்த கோவிலின் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் (நடு) மாரியம்மன் கோவில்களின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) இரவு 9.30 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.
வருகிற 19-ந்தேதி இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து 10 மணிக்கு கம்பம் நடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 23-ந்தேதி இரவு 10.30 மணிக்கு கிராமசாந்தியும், 24-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவிலில் கொடியேற்றமும் நடக்கிறது.
கம்பம் பிடுங்கும் விழா
29-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவும், இரவு 8 மணிக்கு மாவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. 30-ந்தேதி காலை 9.30 மணிக்கு பொங்கல் விழாவும், மாலை 4 மணிக்கு சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடக்கிறது.
31-ந்தேதி இரவு 9.30 மணிக்கு பெரிய மாரியம்மன் மலர் பல்லக்கில் வீதி உலாவும், வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி இரவு 8 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன், இரவு 9 மணிக்கு சின்ன மாரியம்மன் மலர் பல்லக்கில் வீதி உலாவும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா 2-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது. 3-ந்தேதி காலை 10.30 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. இதையொட்டி பெரியமாரியம்மன் கோவிலில் தற்போது பந்தல் அமைக்கும் பணியும், தற்காலிக கடைகள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.