ஓய்வு பெற்ற பேராசிரியர் விபத்தில் பலி

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓய்வு பெற்ற பேராசிரியர் விபத்தில் பலியானார்.

Update: 2022-03-12 20:17 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் 
ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி தெருவை சேர்ந்தவர் சூரிய சந்திர செல்வன் (வயது 64). இவர் வேளாண்மை கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகளின் திருமணம் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கீழ ரத வீதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிா்பாராதவிதமாக அரசு பஸ் மோதியதில் இவர் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி எமிலி செல்வன் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் தேனியை சேர்ந்த ராஜா (42) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்