குத்துச்சண்டையில் தங்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு
மாநில அளவிலான குத்துச்சண்டையில் தங்கம் வென்ற மாணவரை பாராட்டினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
திருப்பூரில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் நடத்தியது. இந்தப் போட்டியில் 158 குத்துச்சண்டை வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 60 கிலோ எடைப்பிரிவில் கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர் முகமது ரோஷன் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றார். இசக்கி சண்முகம் 67 கிலோ எடை பிரிவில் வெண்கலப்பதக்கத்தை வென்றார். மாணவர்களை துணைத்தலைவர் சசி ஆனந்த், துணைவேந்தர் நாகராஜ், பதிவாளர் வாசுதேவன், உடற்கல்வி இயக்குனர் செல்வகணேஷ், ஆகியோர் பாராட்டினர்.