வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதி டிரைவர் பலி

வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதி டிரைவர் பலியானர்

Update: 2022-03-12 19:38 GMT
வாடிப்பட்டி, 
வாடிப்பட்டி அருகே பெருமாள்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் மகன் அருண் (வயது 20). வேன் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு பெருமாள்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வாடிப்பட்டி சென்று கொண்டிருந்தார். கால்நடை மருத்துவமனை அடுத்த நர்சரி கார்டன் வாசல் வந்த போது அவ்வழியாக சென்ற வேன் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அருண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) உமாதேவி வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரான ராமநாயக்கன்பட்டியை சேர்ந்த குருசாமியை கைது செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்