என்ஜினீயரிங் மாணவர் சாவு
கல்லூரி விடுதியில் விஷம் குடித்த என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்தார்
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றத்தில் கல்லூரி விடுதியில் விஷம் குடித்த என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்தார்.
என்ஜினீயரிங் மாணவர்
ராமநாதபுரம் மாவட்டம் கலையனூரை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் பிரித்விராஜன் (வயது 20). இவர் திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜா் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
பிரித்விராஜன் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக விரக்தியுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சம்பவத்தன்று பிரித்விராஜன், கல்லூரி விடுதியில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சாவு
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரித்விராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.