வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்வு
வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்தது. பூவன், ரஸ்தாலி ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நொய்யல்,
வாழை விவசாயிகள்
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மரவாபாளையம், கவுண்டன்புதூர், பேச்சிப்பாறை, கோம்பு பாளையம், நடையனூர், நஞ்சைபுகழூர், பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிட்டு உள்ளனர். இங்கு விளையும் வாழைத்தார்களை கூலியாட்கள் மூலம் வெட்டி உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் வாழைத்தார் விற்பனை மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
பூவன் ரூ.300-க்கு விற்பனை
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ரூ.230-க்கும், ரஸ்தாலி ரூ.230-க்கும், பச்சைநாடன் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி ரூ.220-க்கும், மொந்தன் ரூ.300-க்கும் விற்பனையானது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ரூ.300-க்கும், ரஸ்தாலி ரூ.300-க்கும், பச்சைநாடன் ரூ.250-க்கும், கற்பூரவள்ளி ரூ.300-க்கும், மொந்தன் ரூ.400-க்கும் விற்பனையானது.
வரத்து குறைவின் காரணமாக வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.