திருச்சி, மார்ச்.13-
திருச்சி, கல்லங்காட்டில் உள்ள செயற்கை புல் மைதானத்தில் மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி, சென்னை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. போட்டியில் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.20 ஆயிரமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.10 ஆயிரமும், 3-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.5 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடக்கிறது.