அரசு பஸ் மோதி விவசாயி பலி

அரசு பஸ் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-03-12 18:49 GMT
கிருஷ்ணராயபுரம், 
லாலாபேட்டையை அடுத்த நந்தன் கோட்டையை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 50), விவசாயி. இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் குளித்தலை சென்றுவிட்டு லாலாபேட்டை வந்துகொண்டிருந்தார். திம்மாச்சிபுரம் அருகே வந்தபோது முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சின் பின்பக்கம் மோதியதில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து சாலையில் விழுந்தார். இதில், பலத்த காயம் அடைந்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்