தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 2 வயது குழந்தை பலி

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 2 வயது குழந்தை பலி

Update: 2022-03-12 18:47 GMT
உப்பிலியபுரம், மார்ச்.13-
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்த கோட்டப்பாளையம் மேற்கு வீதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு கனிஷ்கா (வயது 5) என்ற மகளும், ஹனீஸ் (2) என்ற மகனும் உள்ளனர். நேற்று குழந்தைகள் இருவரும் வீட்டின் முன்புள்ள திண்ணையில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென்று ஹனீஸ், திண்ணையிலிருந்து தவறி, அதனை ஒட்டியுள்ள தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துள்ளான். இதனையடுத்து குடும்பத்தினர் அவனை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவன் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்