மாதந்தோறும் மின்கட்டணத்தை கணக்கிட வேண்டும்

மாதந்தோறும் மின்கட்டணத்தை கணக்கிட வேண்டும் என்றுஅரசுக்கு, இந்து மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது

Update: 2022-03-12 18:22 GMT
மயிலாடுதுறை:
மாதந்தோறும் மின்கட்டணத்தை கணக்கிட வேண்டும் என்று அரசுக்கு இந்து மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது. 
செயற்குழு கூட்டம்
இந்து மக்கள் கட்சியின் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர்  மாவட்டங்களின் சார்பில் மண்டல செயற்குழு கூட்டம் மயிலாடுதுறையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் கொள்ளிடம் சாமிநாதன் தலைமை தாங்கினார். 
மாவட்ட துணைத்தலைவர் சொக்கலிங்கம், இளைஞரணி தலைவர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் பார்த்திபன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு பேசினார். 
கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஜெயராமன், தேவா, ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
மாதந்தோறும் மின் கட்டணம்
கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் ஆவின் பால் விலை உயர்த்தியதற்கு இக்கூட்டம் கண்டனம் தெரிவிக்கிறது. மதுவின் விலையும் உயர்ந்துள்ளது.
மாதந்தோறும் மின்கட்டணத்தை கணக்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மேலும் செய்திகள்