பஸ் பயணச்சீட்டு பரிசோதகர் தற்கொலையில் 4 பேர் மீது வழக்கு

முதுகுளத்தூர் அருகே தனியார் பஸ் பரிசோதகர் முருகன் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக 4 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

Update: 2022-03-12 18:17 GMT
முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே தனியார் பஸ் பரிசோதகர் முருகன் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக 4 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். 

பஸ் பரிசோதகர் தற்கொலை

 முதுகுளத்தூர் அருகே உள்ள கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 52). இவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் பஸ் நிறுவனத்தின் பயணச்சீட்டு பரிசோதகராக இருந்ததாக கூறப்படுகிறது. 
இந்நிலையில் கடந்த 9-ந்தேதி முருகன் தனது வீடு அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பரிசோதனை செய்ததில் அவரது சட்டைப்பையில் தற்கொலைக்கு தூண்டியதாக 4 நபர்களின் பெயர்களுடன் கடிதம் இருந்ததாக கூறப்படுகிறது. 

4 ேபர் மீது வழக்கு

 இதைத்தொடர்ந்து பேரையூர் போலீஸ் நிலையத்தில் முருகனின் சகோதரர் ஆறுமுகம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் முருகனுடன் பணியாற்றும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி, மணி, வேல்முருகன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்