கோர்ட்டுக்குள் பெண்ணை செல்போனில் படம் எடுத்தவர் கைது

கோர்ட்டுக்குள் பெண்ணை செல்போனில் படம் எடுத்தவர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-03-12 18:05 GMT
காரைக்குடி,
காரைக்குடி செஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் குமாரவேலு (வயது 55).இவர் வழக்கு சம்பந்தமான விசாரணைக்காக காரைக்குடி லோக் அதாலத் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அப்போது மற்றொரு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்திருந்த சித்ரா என்ற பெண்ணை நீதிமன்ற விதிமுறைகளுக்கு எதிராக அப்பெண்ணை இழிவுபடுத்தும் விதமாக செல்போனில் படம் எடுத்துள்ளார். இதுகுறித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற தலைமை எழுத்தர் கொடுத்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரவேலுவை கைது செய்து அவரது செல்போனை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்