சண்முகர் அலங்காரத்தில் மலையாண்டி சுவாமி
சண்முகர் அலங்காரத்தில் மலையாண்டி சுவாமி காட்சி அளித்தார்.
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே வலையப்பட்டியில் மலையாண்டி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா முதல் நாள் விழா நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சண்முகர் அலங்காரம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.