மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி அகற்றப்படுமா?

அசிக்காட்டில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி அகற்றப்படுமா? என்பது அந்த பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Update: 2022-03-12 17:56 GMT
குத்தாலம்:
அசிக்காட்டில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி அகற்றப்படுமா? என்பது அந்த பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி
குத்தாலம் அருகே அசிக்காடு ஊராட்சி அய்யனார் கோவில் தெருவில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதுடன், சேதமடைந்து கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது. 
 எனவே மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டியில் ஓட்டை விழுந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே சேமடைந்த மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதியதாக கட்டித்தர வேண்டும் என அந்த பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இந்த மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டியின் அருகில் அசிக்காடு ஊராட்சி கிராம நிர்வாக அலுவலகம், நூலகம், கூட்டுறவு அங்காடி, அய்யனார்கோவில், அங்கன்வாடி மையம், புதுவாழ்வு திட்ட மையம் உள்ளிட்டவைகள் உள்ளன.
இடித்து அகற்றப்படுமா?
இதனால் நூலகம், அங்கன்வாடி மையம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர். அப்போது ஆபத்தான மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டியை கடக்கும் போது அவர்கள் அச்சத்துடனே சென்று வருகிறார்கள். 
இந்த மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி அசிக்காடு கிராமத்தின் பிரதான குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. எனவே அரசு விரைவில் நடவடிக்கை எடுத்து சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிதாக  கட்டித்தரப்படுமா? என்பது அந்த கிராம மக்களின் எதிர்பார்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்