திருவாரூர் தியாகராஜர் கோவில் யானை வாகன உற்சவம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி யானை வாகன உற்சவம் நடந்தது.

Update: 2022-03-12 17:37 GMT
திருவாரூர்;
திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி யானை வாகன உற்சவம் நடந்தது.
பங்குனி உத்திர திருவிழா 
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். விழாவின் முக்கிய நிகழ்வாக வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேரோட்டம் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நாள்தோறும் உற்சவங்கள், சாமி வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 
யானை வாகனம்
நேற்று யானை வாகன உற்சவம் நடந்தது. விழாவையொட்டி சந்திரசேகரர்-தருனேந்தசேகரி சிறப்பு அலங்காரத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளினர். பின்னர் கோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சாமிகளுடன் புறப்பட்டு 4 வீதிகளில் சாமி வீதிஉலா வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்