கிருஷ்ணகிரி ஊத்தங்கரையில் நடந்த விபத்தில் நாடக கலைஞர் உள்பட 2 பேர் சாவு

கிருஷ்ணகிரி ஊத்தங்கரையில் நடந்த விபத்தில் நாடக கலைஞர் உள்பட 2 பேர் இறந்தனர்.

Update: 2022-03-12 17:19 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் நடந்த விபத்தில் நாடக கலைஞர் உள்பட 2 பேர் இறந்தனர்.
நாடக கலைஞர்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஆராதனஅள்ளியை சேர்ந்தவர் அக்குமாறன் (வயது 62). நாடக கலைஞர். இவர் கிருஷ்ணகிரி அருகே மோட்டூர் கூட்டு ரோடு அருகில் நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அக்குமாறன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விவசாயி 
ஊத்தங்கரை தாலுகா மண்ணாடிப்பட்டியை சேர்ந்தவர் குமார் (62). விவசாயி. சம்பவத்தன்று இவர் நொச்சிப்பட்டி வனத்துறை குடியிருப்பு பகுதியில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மொபட் கட்டுப்பாட்டை இழந்த அந்த வழியாக சென்ற நொச்சிப்பட்டியை சேர்ந்த சேகர் (54), முருகன் (56) ஆகியோர் மீது மோதியது. 
இந்த விபத்தில் குமார், சேகர், முருகன் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். அதில் குமார் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்ற 2 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்