கட்டிட தொழிலாளி தற்கொலை
கூடுவாஞ்சேரி அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த தைலாபுரம் நரசிம்மன் நகர், குருசாமி தெருவில் வசித்து வந்தவர் மணிகண்டன் (வயது 40). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.